
posted 14th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு மாகாண ஆளுநருடன் இந்தியப் பதில் தூதுவர் பேச்சு வார்த்தை
வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய பதில் தூதுவர் சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸைச் சந்தித்து கலந்துரையாடினர்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் - தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இயற்கை சக்தி வளங்களைப் பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)