வடக்கின் பெரும்போர் - சென். ஜோன்ஸ் வலுவான நிலையில்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வடக்கின் பெரும்போர் - சென். ஜோன்ஸ் வலுவான நிலையில்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 157 ஓட்டங்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் சென். ஜோன்ஸ் கல்லூரி முதல்நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 109 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

'வடக்கின் பெரும் போர்' என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் பெருந்துடுப்பாட்ட போட்டி நேற்று (07) வியாழன் ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்தின் பெருந் துடுப்பாட்டப் போட்டிகளில் முதலாவது என்ற பெருமைக்குரிய இந்த போட்டிக்கு இது 117ஆவது ஆண்டாகும். இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, ஆடிய அந்த அணிக்கு நியூட்டன், சிந்துஜன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். நியூட்டன் அடித்தாட மறுமுனையில் சிந்துஜன் பொறுமை காத்தார். 26 ஓட்டங்களை அணி பெற்றிருந்தபோது 25 பந்துகளை எதிர்கொண்ட சிந்துஜன் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே நியூட்டன் 19 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த டெரிக்சன், சிமில்ரன் ஆகியோர் பொறுமை காத்தனர். எனினும் இருவரும் 15, 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த அபிஷேக் 10 ஓட்டங்களுடன் வீழ்ந்தார்.

ஆறாவது வீரராக களமிறங்கிய சயந்தன் நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடினார். பந்துகளை தெரிவு செய்து ஆடினார். எனினும் மறுமுனையில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அபாரமாக ஆடிய சயந்தன் 6 பௌண்ட்ரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை சேர்த்து இறுதி விக்கெட்டாக வீழ்ந்தார்.

56.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த மத்திய கல்லூரி 157 ஓட்டங்களைப் பெற்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் பந்துவீச்சில் கவிசன் 5 விக்கெட்களையும் மாதுளன் 3 விக்கெட்களையும் ராண்ட்யோ, கிந்துசன் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தனது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது சென். ஜோன்ஸ் அணி.

தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடினர். அபிஜோய்சந்த் 3 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானம் காட்டி ஆடிய சச்சினுடன் இணைந்த கிந்துசன் அபாரமாக ஆடினார். அவர் 59 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டமிழந்தார்.

நேற்றைய நாள் ஆட்டம் முடிவடைந்தபோது சென். ஜோன்ஸ் கல்லூரி 30.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 36 ஓட்டங்களுடன் சச்சின் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட இரு விக்கெட்களையும் திசான் கைப்பற்றியிருந்தார்.

இன்று வெள்ளி போட்டியின் இரண்டாவது நாளாகும்.

வடக்கின் பெரும்போர் - சென். ஜோன்ஸ் வலுவான நிலையில்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)