மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம்

சம்மாந்துறை, மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் சேவைகள் தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

அதிகமான நோயாளர்கள் குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக தினமும் வருவதுண்டு. வெளிநோயாளர் பிரிவில் போதுமான இடவசதிகள் இல்லாததன் காரணத்தினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பலரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுமார் 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டது.

அந்த வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை மக்கள் பாவனைக்கு கையளித்து வைத்தியசாலையின் சுகாதார நடவடிக்கைகளையும் பார்வையிடும் பொருட்டு அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர், மல்வத்தை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)