
posted 17th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மனித உரிமைகள் முதலுதவி மையம் யாழ்ப்பாண பணிமனை திறந்து வைப்பு
மனித உரிமைகள் முதலுதவி மையம் யாழ்ப்பாணத்தில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கோவில் வீதியிலுள்ள யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் மனித உரிமைகள் முதலுதவி மையம் திறந்து வைக்கப்பட்டது.
றைற் ரூ லைப் ஹியூமன் றைற்ஸ் சென்ரரின் (RIGHT TO LIFE HUMAN RIGHTS CENTRE) தலைவர் பிலிப் , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் சுகிர்தராஜ் இணைந்து மனித உரிமைகள் முதலுதவி மையத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சேவ் ஏ லைப் (SAVE a LIFE) யாழ். மாவட்ட இணைப்பாளர் ராகுலன், றைற் ரூ லைப் இணைப்பாளர் பிரசாந்தன், றைற் ரூ லைப் திட்ட முகாமையாளர் மதுசாலினி , மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)