
posted 29th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மக்கள் பாவனைக்காக கையளிப்பு
வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார்.
8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் முத்துபண்டா,கடற்தொழில் மற்றும் நீரியல் வள மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் சுதாகரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்வுக்கு வருகை தந்த ஆளுநர் செந்தில் தொண்டமானிற்கு விவசாயிகள் பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)