மகத்துவமான ரமழான் மாதம்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மகத்துவமான ரமழான் மாதம்

“இன நல்லினக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது. இந்த அடிப்படையில் மகத்துவமான ரமழான் மாதத்தில் நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் முன்னுதாரணமாக இடம்பெறுகின்றன.”

இவ்வாறு, ஹற்றன் நெஷனல் வங்கியின் நிந்தவூர்க்கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (27) புதன் கிழமை நடைபெற்ற வருடாந்த இப்தார் நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஹற்றன் நெஷனல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் (கடன் அறவீடு) ஏ.எல். சிராஜ் அகமட் கூறினார்.

ஹற்றன் நெஷனல் வங்கியின் நிந்தவூர் கிளை முகாமையாளர் என். நந்த கோபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிராந்திய முகாமையாளர் (வியாபாரம்) எஸ். சத்திய சீலன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வங்கிக்கிளை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வில், வங்கி வாடிக்கையாளர்கள், பிரதேச முக்கியஸ்த்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

பிராந்திய முகாமையாளர் சிராஜ் அகமட் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“இலங்கையின் முன்னணி வங்கியான ஹற்றன் நெஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திருப்திகரமான சேவைகளை தொடர்ச்சியாக ஆற்றிவருவதுடன், வாடிக்கையாளர்களின் திருப்திகரமான, நல்லபிப்பிராயத்தையும் கொண்டு மிளிர்ந்து வருகின்றது.

இதற்கு எடுத்துக்காட்டாகவும், இன, மத பேதங்களுக்குப்பால் தொடர்ந்துவரும் மக்கள் சேவையின் சிறப்பம்சமாகவும் இன்றைய நல்லிணக்க இப்தார் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இஸ்லாமிய வரலாற்றில் முக்கியத்துவமான இந்த புனித ரமழான் மாதம் புனித அல்-குர்ஆன் இறக்கப்பட்ட வரலாற்றுப் பெருமை மிக்க மாதமாகும்.
இதேபோன்று மேலும் சிறப்புமிக்க சம்பவங்களுக்கும் உரித்தான இந்த புனித ரமழானின் உம்ரா நிகழ்வை ஏற்பாடு செய்ததன் மூலம் இந்த வங்கிக் கிளை சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு வலுச்சேர்த்துள்ளது” என்றார்.

வாடிக்கையாளர்கள் சார்பில் ஓய்வு பெற்ற மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம். இஸடீன் உரையாற்றுகையில், வங்கிக்கிளை முகாமையாளர் நந்தகோபன் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்குப் பெரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

மகத்துவமான ரமழான் மாதம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)