
posted 28th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பெண்கள் உழவு இயந்திரம் ஒடிக்கொண்டே கொண்டாடிய பெண்கள் தின நிகழ்வு
பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு இன்று 28 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வு காலை 9.30 மணியளவில் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றது. உழவு இயந்திர சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ள 8 பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி நிகழ்வில் பெறுமதி சேர்த்தனர்.
குறித்த பெண்களிற்கு ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் கைலாகு கொடுத்து உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து குறித்த பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி விழா மண்டபம் வரை சென்றதை தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமானது. இந் நிகழ்வில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)