
posted 3rd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பாக்கு நீரிணையை நீந்தி கடந்து 13 வயது மாணவன் சாதனை
பாக்கு தொடுகடலை 13 வயதான ஹரிகரன் தன்வந்த் என்ற மாணவன் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையான 32 கிலோமீற்றர் தூரத்தை 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் அவர் நீந்திக் கடந்துள்ளார். இதன் மூலம் குறைவான நேரத்தில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் என்ற பெருமையையும் தன்வந்த் பெற்றுள்ளார்.
அதிகாலை 5.30 மணியளவில் தனுஷ்கோடியில் ஆரம்பித்த இவரின் நீச்சல் பயணம் மதியம் 2 மணியளவில் தலைமன்னாரில் நிறைவடைந்தது. தலைமன்னாரை அடைந்த தன்வந்தை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் செவிதி சாய் முரளி வரவேற்று பாராட்டினார்.
ஹரிகரன் தன்வந்த் திருகோணமலை இந்துக் கல்லூரியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)