
posted 22nd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பருத்தித்துறை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த அவசர சிகிச்சை பிரிவு நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் திட்டத்தில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த ப. சத்தியலிங்கத்தின் முயற்சியால் இந்தக் கட்டடத்துக்கு 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாகல ரட்நாயக்க, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)