
posted 7th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நிரந்தர காணி உறுதிப் பத்திரம்
கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) உள்ள கடை சொந்தக்காரர்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் விதமாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் காணி ஆணையாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடிய போது ஜனாதிபதியின் "உறுமய" திட்டத்தின் கீழ் நிரந்தரமான காணி உறுதிகளை வழங்க காணி ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் மத்தியில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த வாரம் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை சந்தித்து பேசியதை அடுத்து அவர்கள் வழங்கிய துரித ஒத்துழைப்பினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)