
posted 6th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நல்லை ஆதீனத்திடம் ஆசி பெற்ற யாழ். இந்திய துணைத் தூதுவர்
யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத் தூதுவராக பதவியேற்றுள்ள செவிதி சாய் முரளி நேற்று நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில், சமய ரீதியான தற்போதைய நிலைமைகள், மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமய நிகழ்வுகள், இளைய சமுதாயத்தினால் மாறிவரும் சமய புறழ்வான பழக்கவழக்கங்கள், எதிர்காலத்தில் சமய சித்தார்த்தம் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் சமயத் தலைவர்களினால் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், இந்திய தூதர அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)