
posted 30th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சொறிக்கல்முனை திருச்சிலுவை தலத்தில் புனித வெள்ளி அனுஷ்டிப்பு
கிழக்கு மாகாணத்தின் சிறப்புமிக்க பழம்பெரும் திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிறிஸ்தவ பக்தர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைகளை சுமந்தவாறு 6ஆம் கொலனி அந்தோனியார் ஆலயம் மற்றும் வீரமுனை சந்தி ஆகியவற்றிலிருந்து பவனியாக சம்மாந்துறை சொறிக்கல்முனை பிரதான வீதிவழியாக திருத்தலத்தை வந்தடைந்தனர்.
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத் தந்தை சுலக்சன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)