சென்னையில் தமிழக முதல்வர் ஶ்ரீ. ல. மு. கா. தலைவர் சந்திப்பு

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சென்னையில் தமிழக முதல்வர் ஶ்ரீ. ல. மு. கா. தலைவர் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இறையருள் கவிமணி கா. அப்துல் கபூர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்கு அவர் புறப்பட்டுச் செல்வதற்கு சற்று முன்னர் இந்த சந்திப்பு , சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறுநாள் நடைபெற்ற அரசு விழாவொன்றில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் திருச்செந்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்கு சற்று முன்னர் இது நடந்துள்ளது.

அடுத்து, ரயிலில் ஏறிய பின்னரும் முதல்வர் ஸ்டாலின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை மீண்டும் அருகில் அழைத்து, நன்றி தெரிவித்துள்ளதோடு, நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்க முடிந்தையிட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.

அன்றைய நாளில் இருவருக்கும் இருந்த முக்கிய அலுவல்கள் காரணமாக தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குப் போதிய அவகாசம் இருக்கவில்லை.

அதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.

தமிழக அமைச்சர் பி.கே. சேகர் பாபுவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாதர் அணியின் தலைவியும், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான பாத்திமா முஸப்பரும், அவரது கணவர் முஸப்பரும், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீதுவும் இருந்துள்ளனர்.

முன்னதாக தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸும் மு.கா. தலைவர் ஹக்கீமை வரவேற்று கௌரவித்திருந்தார்.

சென்னையில் தமிழக முதல்வர் ஶ்ரீ. ல. மு. கா. தலைவர் சந்திப்பு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)