
posted 17th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சாய்ந்தமருதில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அவரது வீட்டில் இடம்பெற்றிருப்பதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதுடைய முஹம்மது இப்றாஹீம் அலீம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சாய்ந்தமருது பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)