கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோதப்போக்கு

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோதப்போக்கு

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு எதிரான விரோதப் போக்கு தொடர்ந்து வருகின்றது. கட்டம் கட்டமாக முஸ்லிம் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை இன்னும் நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகள் எவரும் பணி புரிய முடியாத நிலை ஏற்படலாம். இவ்வாறு கூறியுள்ளார் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் இருந்த முஸ்லிம் அதிகாரிகள், ஆளுநரால் அகற்றப்பட்ட செய்தியை ஏற்கனவே நான் பகிரங்கப்படுத்தியிருந்தேன். அந்த வரிசையில் தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை மூத்த அதிகாரி ஒருவர் எவ்வித பதவியும் வழங்கப்படாது இடமாற்றப்பட்டிருக்கிறார்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் 5 அமைச்சுகளில் இரண்டு தமிழ் செயலாளர்களும், இரண்டு முஸ்லிம் செயலாளர்களும், ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்தனர். இந்த மாகாணத்தின் இனச் சமநிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் எந்தவோர் அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர்கள் இல்லை. முதலமைச்சு, சுகாதாரம், வீதி அபிவிருத்தி ஆகிய 3 அமைச்சுகளிலும் தமிழ் செயலாளர்களும், கல்வி, விவசாயம் ஆகிய இரண்டு அமைச்சுக்களிலும் சிங்கள செயலாளர்களும் கடமை புரிகின்றனர். இது இந்த மாகாணத்தில் வாழ்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவத்தையும் கொச்சைப்படுத்தும் செயல்பாடாகும். எனினும், எந்த அரசியல் தலைமையும் இதனைக் கண்டு கொண்டாதாகத் தெரியவில்லை.

எனவே, கிழக்கு மாகாண முஸ்லிம் சமுகம் விழித்தெழ வேண்டிய அவசர நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோதப்போக்கு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)