
posted 31st March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
காணாமல் ஆக்கப்பட்டோர் எப்போ வருவர் - போராட்டம் எப்போ நிற்கும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியாவில் நேற்று (30) சனிக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று முற்பகல் 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணையின் அவசியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)