கண் வைத்திய அதிகாரி அல்அமீன் றிஷாத் காலமானார்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கண் வைத்திய அதிகாரி அல்அமீன் றிஷாத் காலமானார்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியான டாக்டர் எம்.எம். அல்அமீன் றிஷாத் தனது 53 ஆவது வயதில் காலமானார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த இவர் கொழும்பு பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் நீண்ட காலம் பணியாற்றி அத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்ததுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை என்பவற்றிலும் கடமையாற்றியிருந்தார்.
கொரோனா தொற்று இடர் காலப்பகுதியில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பொறுப்பேற்ற இவர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரப்பணிப்புடன் சேவையாற்றியிருந்தார்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினராகவும் மற்றும் சில பொது அமைப்புகளிலும் அங்கம் வகித்து பிரதேச, சமூக நலன் சார்ந்த விடயங்களிலும் இவர் முன்னின்று பணியாற்றி வந்தார்.

அவரது ஜனாஸா திங்கட்கிழமை (04) நள்ளிரவு சாய்த்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் பெரும் திரளான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண் வைத்திய அதிகாரி அல்அமீன் றிஷாத் காலமானார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)