ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும்

வடக்கு-கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு, உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் டக்ளஸ் இ. சொனெக் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (15) வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் , அமெரிக்கன் கோர்னரில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளோம்.

இந்நிலையில், இங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இளைஞர்- யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தினர்.

இவ்வாறான விடயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதற்கேற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார்.

ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)