
posted 22nd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
உடல்நிலை பாதிப்லும் உண்ணாவிரதத்தைத் தொடரும் மீனவர்கள்
இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை தடுக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் அண்மையாக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயமருகே தீவகத்தைச் சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (19) காலை ஆரம்பித்த இந்தப் போராட்டம் நேற்று (21) வியாழன் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. இரவு - பகலாகத் தொடரும் இந்தப் போராட்டத்தில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா, அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதத்தினைக் கைவிடாமல் தொடருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)