
posted 18th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
இறால் பண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண ஆளுநர்
கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலகம் பட்டிப்பளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கொண்டார்.
இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)