
posted 16th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அனுரகுமாரவுக்கு கிளிநொச்சியில் தமிழரசுவின் உறுப்பினர் எதிர்ப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று (16) சனிக்கிழமை எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
மக்கள் சந்திப்புக்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து ஏ-9 வீதியில்,
"இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றம்வரை சென்று பிரித்த பெருமை ஜே.வி.பியை சாரும்”
”சொந்த இனத்தையே அழித்த ஜே.வி.பி எங்கள் இனத்திற்கு எவ்வாறு தீர்வு தரும்"
என எழுதப்பட்ட பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)