
posted 26th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அக்குபஞ்சர் சிகிச்சையினால் உயிரிழந்தார்
முழங்கால் வலிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமி தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
சமூகவலைத்தளத்தில் வெளியான விளம்பரங்களை நம்பி, யாழ். நகருக்கு அண்மையாக பிறவுண் வீதியில் இயங்கிய அக்குபஞ்சர் நிலையத்தில் சிகிச்சை பெற்றவரே இவ்வாறு உயிரிழந்தார்.
அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.
அந்த சிகிச்சை நிலையத்தில் அவருக்கு இரு முழங்கால்களிலும் ஊசிகளால் குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இதனால் கடும் வலிகள் ஏற்பட்டமையால் சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) அவர் உயிரிழந்தார்.
அவரின் உடற்கூற்று பரிசோதனையில், அக்குபஞ்சர் சிகிச்சை என தவறான முறைகளில் செலுத்தப்பட்ட ஊசிகள் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டு அவை உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)