
posted 7th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நாடறிந்த எழுத்தாளர் உமா வரதராஜனின் “எல்லாமும் ஒன்றல்ல” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி (ஞாயிறு) கல்முனையில் நடைபெறவிருக்கின்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பதிப்பாக வெளிவந்துள்ள இந்த நூலின் வெளியீட்டு விழா நிகழ்வு கல்முனை வியூகம் கலை, இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
பிரபல இலக்கிய கர்த்தா பேராசிரியர் செ. யோகராசா தலைமையில், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, நல்லதம்பி மண்டபத்தில் நிகழ்வு நடைபெறும்.
நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நூல் வெளியீட்டுரையுடன் மூத்த ஊடகவியாலாளர் க. குணராசாவுக்கு முதற் பிரதியும் வழங்குவார்.
மேலும் இந்த வெளியீட்டு நிகழ்வில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், டாக்டர்.திருமதி. புஸ்பலதாலோக நாதன், கவிஞர் சோலைக்கிளி, மன்;சூர் ஏ.காதர், சபா சபேஷன் வாசுதேவன், சிவ. வரதரஜன், சஞ்சீவிசிவகுமார், பி. சஜிந்ரன் ஆகியோர் உரையாற்றவுமுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)