
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு நோயாளர்கள் பாதிப்பு
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.
இன்று (15) புதன் வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு, மாதாந்த சிகிச்சைகள் (கிளினிக்) இடம்பெறவில்லை.
அத்தியாவசிய சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டன. இதனால் சிகிச்சைக்காக வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதுடன், அரசாங்கத்தை கடுமையாகச் சாடினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)