
posted 9th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி திட்டத்துடன், உலர் உணவு பொதிகள் புதன்கிழமை (8) காலை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னாரில் உள்ள மெசிடோ அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வரும் இந் நிறுவனம் தனது மனிதாபிமான செயல் திட்டத்தின் ஓர் அங்கமாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 180 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட இக் குடும்பங்களுக்கு முதலாம் கட்ட நிவாரணம் வழங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 2 ஆம் கட்ட நிவாரண பணிகள் புதன்கிழமை (8) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இக் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களாகவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட சட்ட உதவியை நாடும் குடும்பங்கவர்களாகவும் உள்ள 40 குடும்பங்களுக்கு இந் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் குறித்த குடும்பங்கள் 3 மாத முடிவில் சுய வருமானத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விதைகளை அவர்களது காணிகளிலே விதைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இம் 3 மாத உலர் உணவு திட்டம் நிறைவடையும் போது அவர்களின் சுய தொழில் முயற்சியாக கச்சான் அறுவடை அவர்களுக்கு கைகொடுக்கும் என்பதன் அடிப்படையில் குறித்த சுய தொழில் உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு புதன்கிழமை (8) மதியம் 50ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கருவாடு பதனிடுவதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாச்சிக்குடா, இரணைமா நகர் மற்றும் வலைப்பாடு ஆகிய மூன்று மீனவ பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு உதவி திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் 7 குழுக்களுக்கு மன்னார் மாவட்டத்தில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)