
posted 12th February 2023
ஏர்நிலம் அமைப்பினால் தைபூச நன்நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் கைம்பணி செய்பவர்களை கௌரவிப்புடனான 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா 11.02.2023 அன்று மாவடி சித்தி விநாயகர் ஆலயம் மாங்குளத்தில் சிறப்புறவே இடம்பெற்றது..
தள்ளாடும் வயதிலும் தளராத நம்பிக்கையுடன் தொழில் செய்யும் 10 விவசாயிகள் கைம்பணி உற்பத்தியாளர்களை இனம்கண்டு அவர்களை வாழும் வயதினிலே வாழ்த்திய நிகழ்வாக இது இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலை நிகழ்வுகள், உரைகள், பரிசில்கள், பொங்கல் உணவு போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வை ஏற்பாடு செய்த ஏர்நிலத்திற்கும் 'ஏர் நிலம்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மாங்குளம் விவசாயிகள், ஏர்நிலம் செயலாற்றுனர்கள், கைம்பணி உற்பத்தியாளர்கள், முன்பள்ளிகள், பொது அமைப்புகள், கல்வி நிலையங்கள், கிராம மட்ட அமைப்பினர், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)