
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
'பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான சமூகப் பிரச்சனைகள் மற்றும் வன்முறைகளைத் தணிக்கும் நோக்கில் ஒரு வலுவான பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் பெண்களை வலுவூட்டுதலும் அதனூடாக சமூகத்தை அபிவிருத்தி செய்தலும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந் நிகழ்ச்சித் திட்டத்தில் மன்னார் மாவட்ட செயற்பாட்டுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பரிந்துரை முன்னெடுப்பு செயற்திட்டம் தொடர்பான திட்ட அறிமுகம் மற்றும் மாவட்ட மட்டச் செயலனி உருவாக்கமும் மேற்கொள்ளப்பட்ட இந் நிகழ்வில் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவிரையாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி கோசலி மதன் மற்றும் மன்னார் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி புராதினி சிவலிங்கம் ஆகியோருடன் பலதரப்பட்ட அமைப்புக்கள் திணைக்களங்கள் சார்ந்தவர்கள் யாழ் பகுதியிலிருந்து வருகை தந்திருந்த திருநர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது மன்னாரில் கறீற்றாஸ் வாழ்வோதயம் பயிற்சி மண்டபத்தில் 09.03.2023 வியாழக்கிழமை 'ட்ரான்ஸ்போம்' அமைப்பின் அனுசரனையுடன் நடைபெற்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)