
posted 28th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக வெடித்தது போராட்டம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய செவ்வாய் தினம் (28) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநரால் நாவலர் கலாச்சாரம் மண்டபம் மத்திய அரசாங்கத்திற்கு தாரைவாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் செயலத்திற்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
- ஆளுநர் என்ற எலும்புத் துண்டுக்காக தமிழினத்தை விற்காதே
- ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா
போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)