
posted 2nd March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ்ப்பாணத்தில் 'வடக்கின் நுழைவாயில்' எனும் தெனிப்பொருளில் 13ஆவது தடவையாக சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை (03) வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (05) வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது என்று யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் கு. விக்னேஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (01) புதன்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்த சர்வதேச கண்காட்சி 13ஆவது தடவையாகவும் கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் செயல்படுத்தவுள்ளோம். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்ப நீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.
பல வருட காலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தை வாய்ப்பில் இருந்த பெரும் இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த வருடம், 250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.
பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிட முடியும் என்றும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)