
posted 16th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வட மாகாணங்களுக்கான கரபந்தாட்ட சுற்றுப் போட்டிகள்
தமிழர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஆண் பெண் இருபாலாருக்குமான வட மாகாண கரபந்தாட்ட சுற்றுப் போட்டியானது 18 மற்றும் 19 ந் திகதிகளில் (18,19.03.2023) மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றன.
இப் போட்டிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சார்ந்த கழகங்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றன.
இச் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டும் முதலாவது அணிக்கு 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாவும், மூன்றாவது இடத்துக்கு வரும் கழகத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாண ரீதியில் கரபந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவது இடத்தில் வெற்றியீட்டும் கழகத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாவும், இரண்டாவது இடத்துக்கு வரும் கழகத்துக்கு ஒரு இலட்சம் ரூபாவும், மூன்றாம் பரிசு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிந்துகொள்ள விரும்புவோர் யாழ்ப்பாணத்தில் 0776176988 , கிளிநொச்சியில் 0770825041, மன்னாரில் 0774974108, முல்லைத்தீவில் 0774652323 மற்றும் வவுனியாவில் 0743006293 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட மேலும் தொடர்புகொள்ள விரும்பினால் 0771377484 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)