யானை- மனித மோதல்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யானை- மனித மோதல்

பொத்துவில் ஹிஜ்ரா நகர் பிரதேசத்தின் சிரியா, ஜெய்க்கா, ரொட்டை ஆகிய கிராமங்களில் யானை- மனித மோதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜெய்க்கா பல்தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ், வனஜீவராசிகள் பொறுப்பதிகாரி, கிராம நிலதாரி மற்றும் மூன்று கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

அண்மைக் காலமாக இப்பிரதேசங்களில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் தாக்குதல்களினால் மக்கள் உயிர் அச்சுறுத்தலுடன் தமது இரவு வேளைகளை தூக்கமின்றி பீதியுடன் கழித்து வருவதுடன் மக்களின் சொத்துக்கள், விவசாய உற்பத்திப் பயிர்களுக்கும் பெரும் நாசமும் ஏற்பட்டு வருவதாக இக்கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் கவனத்திற்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

இங்கு மக்களின் கருத்துக்களை உன்னிப்பாக கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கருத்துத் தெரிவிக்கும்போது,

கடந்த சில தினங்களாக இக்கிராமங்களில் யானையின் அட்டகாசம் அதிகரித்திருப்பதனால் இவற்றைத் தடுப்பதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் உரிய இடங்களுக்கு விரைவாக வருகை தந்து யானைகளை விரட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்தோடு அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இப்பகுதி மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.

கடந்த காலங்களைவிட யானை வெடில் குறைந்தளவான தொகையே இப்போது பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கின்றது. பொத்துவில் பிரதேசத்திற்கு கூடுதலான யானை வெடில்களை வழங்குமாறு உரிய அதிகாரிகளைக் கோரியுள்ளேன்.

அதேபோன்று இப்பகுதி மக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பதற்காக யானை வேலிகளை அமைப்பதற்காக அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் முஷாரப் எம்.பி. தெரிவித்தார்.

யானை- மனித மோதலைத் தடுப்பதற்காக அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதற்காக சிரியா, ஜெய்க்கா, ரொட்டை ஆகிய கிராமங்களில் இருந்து ஒரு குழுவொன்றும் இங்கு தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யானை- மனித மோதல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)