
posted 14th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மூன்று புதிய உறுப்பினர்கள்
சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களாக அண்மையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மூன்று, உறுப்பினர்கள் முதன்முதலாக சபை அமர்வில் கலந்து கொண்டதுடன் தமது கன்னி உரைகளையும் ஆற்றினர்.
தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற 60 ஆவது மாதாந்த சபை அமர்வில் புதிய உறுப்பினர்களான பி.எம்.எம். மீராமுகைடீன் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களான எஸ். ராஜேஸ்வரி, ஏ.எச்.எம். காலித் ஆகியோரே முதன் முதலாகக் கலந்து கொண்டனர்.
சபை அமர்வின் ஆரம்பத்தில் தவிசாளர் மாஹிர் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தும் வரவேற்றும் உரையாற்றினார். அத்துடன் சபை உறுப்பினர்கள் பலரும் கட்சிபேதமின்றியும் உறுப்பினர்களை வரவேற்றும் வாழ்த்தியும் உரையாற்றினர்.
தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் மூவரும் தமது கன்னி உரைகளை ஆற்றியதுடன், தமக்கு வாழ்த்து தெரிவித்த தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)