
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
முதலுதவி செயன்முறை பயிற்சிநெறி
யாழ்.மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , இலங்கை செங்சிலுவைச் சமூகத்துடன் இணைந்து முதலுதவி செயன்முறை பயிற்சிநெறியை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் அண்மையில் ஆரம்பித்தனர்.
இம் முதலுதவி பயிற்சியின்போது பாடசாலைகளிலும், சமூகங்களிலும் ஏற்படுகின்ற மருத்துவ அவசர நிலைமைகளில் முறையான மருத்துவ உதவி கிடைக்கப்பெறும் வரை எவ்வாறு அதனைக் கையாளுதல் தொடர்பான செயன்முறை விளக்கங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
இதன்மூலம் எதிர்கால சந்ததியினர் தன்நம்பிக்கையுடையவர்களாகவும், நற் சுகாதார பழக்கவழக்கங்களை தெரிந்தவர்களாகவும், அவசர நிலமைகளில் உதவும் மனப்பாங்கை பெற்றவர்களாகவும் உருவாக்கப்படுவார்கள்.
இப் பயிற்சிநெறியானது பொது வைத்திய நிபுணர் வைத்தியர் க. சத்தியமூர்த்தி, மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் பகீரதன், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பெறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் வே. கமலநாதன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிராந்திய இணைப்பாளர் வைத்தியர் வி. தர்ஷன் மற்றும் இலங்கை செங்சிலுவைச் சமூகத்தினரின் பங்கு பெற்றதலுடன் இடம்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக இம் முதலுதவி பயிற்சிநெறி ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)