
posted 5th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முச்சக்கர வண்டி - உழவு இயந்திரம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு சண்முக வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு - ஓட்டமாவடியை சேர்ந்த மீராமுகைதீன் பாத்தும்மா (66) என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், அக்கரைப்பற்றிலுள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றது.
நெல்மூடைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்துக்கு உள்ளானது.
சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)