
posted 22nd March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மார்ச் 22 உலக நீர் தினம்
மார்ச் 22 உலக நீர் தினத்தை முன்னிட்டு கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் முல்லைத்தீவு நகர கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு புதன் (22) காலை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் இயற்கை சூழலைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனம் பல்வேறுபட்ட சூழல் நேய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உலக நீர் தினத்தன்று நீரின் அவசியத்தை வலியுறுத்தியும் சூழலை தூய்மையாக பேணும் வகையிலும், இந்த சுத்தப்படுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)