மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் திங்கள் (06) வடமராட்சி, கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றி தொடர்ந்து அவரது உருவப் படத்திற்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க. சுகாஸ், மற்றும் உறவுகள் ஆதரவாளர்கள், உட்பட பலரும் அணிவித்ததுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தலில் நினைவுரைகள் இடம் பெற்றது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்த காலத்தில் 2008ம் ஆண்டு இதே நாளில், மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உறவுகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)