
posted 8th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்முனை மாநகர சபையில் நடக்கும் ஊழல்கள் பற்றி அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் தேசிய அரியல் அதிகாரத்தை பயன்படுத்தி அவை தடுக்கப்பட்டதாக கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது பள்ளி, மாநகர பிரதி நிதியும் அ.இ. மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சிலரும் கூறுவது மக்களை ஏமாற்றும் கருத்தாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது விடயமாக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் தலைவரோ, ஹரீஸ் எம்பியோ கடந்த 2020 முதல் அமைச்சர்களாக இருக்கவில்லை. இந்த நிலையில் எவ்வாறு இவர்கள் தேசிய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலுக்கெதிரான மாநகர சபை தோடம்பழ உறுப்பினரின் முறைப்பாட்டை தடுக்க முடியும்?
ஒரு சாதாண எம்பியான இவர்களுக்கு ஊழலுக்கு எதிரான முறைப்பாட்டை தேசிய அரசியலின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை பிடித்து தடுக்க முடியுமா?
அவ்வாறு தடுத்திருந்தால் அப்போதே இது பற்றி ஊடக மாநாட்டை கூறி மக்களுக்கு பகிரங்கப்படுத்தவில்லை? மட்டுமுன்றி இது பற்றி ஊழலுக்கெதிரான அமைப்புக்கள், பொலிஸ் மாஅதிபர்களுக்கு அறிவிக்காதது ஏன்?
20க்கு வாக்களித்ததன் மூலம் எம்.பீ.க்களுக்கு கிடைப்பது கிடைத்தாயிற்று. ஆனாலும், அமைச்சு அதிகாரம் 20க்கு ஆதரவளித்தோரில் ஹாபிஸ் தவிர மற்ற மு. கா.வினருக்கு கிடைக்கவில்லை. அத்துடன் ஹக்கீமும் ரிசாதும் வெளிப்படையில் 20க்கு ஆதரவளிக்கவில்லை. அப்படியாயின் எப்படி இவர்களால் தலையிட முடியும்?
அதுவும் ரணில் ஜனாதிபதி ஆகி பல மாதங்கள் ஆகிய நிலையில் ரணிலுக்கு மு. கா., ம. கா. ஆதரவில்லை என்பது தெரியாதா? ஏன் ரணிலின் ஆட்சியில் இக்கடிதங்களை உரியவர்களுக்கு அனுப்பவில்லை?
20க்கு வாக்களித்ததால் அதிகாரம் இருக்குமாயின் இவர்கள் ஊழல் தடுப்பை எதிர்த்தார்கள் என்றால் ஏன் ஊழல் நடப்பதாக மேயரிடம் கடிதம் கொடுத்த உறுப்பினர்கள் ஒரு ஊடக மாநாட்டை கூட்டி பேச முடியாதளவு இவர்கள் வாயில் மேயர் முட்டப்பம் வைத்தாரா? சுத்த ஏமாற்று.
அத்துடன் ரணில் பிரதமரானவுடன் ஹரீஸ் போன்றோர் மீண்டும் அரச ஆதரவிலிருந்து விலகி சஜித்துடன் இணைந்து கொண்டனர்.
அத்துடன் இவர்கள் ரணில் ஜனாதிபதி ஆக வாக்களிக்கவுமில்லை என்பதால் இவர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கவில்லை என்பது தெரியாதா?
மட்டுமின்றி தோடம்பழ உறுப்பினர் சொல்வதன்படி ஊழல் நடப்பதாக மேயருக்கே கடிதம் கொடுத்துள்ளனர். இது கள்வனிடம் களவை கண்டு பிடிக்க சொல்லும் முட்டாள்தனமாகும்.
இக்கடிதத்தை ஏன் பொலிஸ் மா அதிபருக்கு இவர்கள் அனுப்பவில்லை? அது மட்டுமல்ல, அதாவுள்ளாவின் கட்சிக்கும், கல்முனை மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உள்ளார். அவர் ஏன் இதை தன் தலைவருக்கு அறிவிக்கவில்லை. அதாவுள்ளாவும் அரசுக்கு நெருக்கமான எம் பியாக உள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஊழல் முறைப்பாட்டை அரசின் மேல்மட்டத்தை பயன்படுத்தி தடுப்பதை ஏன் அதாவுள்ளாவினால் தடுப்பதை தடுக்க முடியவில்லை?
இதன் மூலம் அனைவரும் ஊழலுக்கு துணை போயுள்ளனர்.
உண்மையில் சொல்லப்போனால் மாநகர சபையின் ஆட்சிக்கு ஒத்துழைத்த முஸ்லிம் காங்கிரஸ், தோடம்பழம், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை உறுப்பினர்கள் அனைவரும் மேயரின் அடிமைகளாகவே இருந்துள்ளனர். சும்மா பெயருக்கு சில கடிதங்களை கொடுத்துவிட்டு மேயர் தலைமையிலான மாநகர சபையின் ஊழல் கண்டு பிடிக்கப்பட மாட்டாது என்ற தைரியத்தில் வாய் மூடி இருந்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)