
posted 28th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மாணவர்களுக்கான விநியோகம்
கல்முனை வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சீருடைத் துணிகளும், புத்தகங்களும் வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலயத்திலும் சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்திலும் இடம்பெற்றது.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் சஹ_துல் நஜீமின் வழிகாட்டலில் கல்முனை வலயத்தின் கீழ் உள்ள 67 பாடசாலைகளில் கல்வி பயிலும் 38,529 மாணவர்களுக்கான சீருடைத்துணிகளும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.
அதிபர்களான ஏ.சி.எம். றிஸாத், யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற வைபவங்களில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.எம். ஜபீர், ரி.கே. பத்திரன, பிரதி அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)