
posted 30th March 2023

அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மாணவன் உயிரிழந்தார்
சைக்கிளில் சென்ற மாணவனை வான் மோதித் தள்ளியதில் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு - காத்தான்குடி - நாவற்குடா பிரதான வீதியில் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், காத்தான்குடியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்த சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஹமட் அன்பாஸ் (17 வயது) என்பவரே உயிரிழந்தார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்துகொண்டிருந்த வான் சைக்கிளில் சென்ற மாணவனை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் வானின் இலக்கத்தகடு மீட்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)