
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னாரில் வீதி விபத்தில் ஒருவர் பலி. இருவர் வைத்தியசாலையில்
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் எதிரும் புதிருமாக மோட்டர் பைசிக்களில் பயணித்தவர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் மரணித்ததுடன் இருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் செவ்வாய் கிழமை (21) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் வட்டாரத்திலிருந்து ஆரம்ப விசாரனையிலிருந்து தெரிய வருவதாவது;
உயிலங்குளத்திலிருந்து இருவர் ஒரு மோட்டர் பைசிக்களில் அடம்பனை நோக்கி அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் பயணித்ததாகவும் அதேநேரத்தில் இன்னொருவர் அடம்பனிலிருந்து நானாட்டான் நோக்கி இதே பாதையில் பயணித்த போதே இரு பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது.
இந்த விபத்து பாலைக்குழி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு பைக்கில் பயணித்த இரண்டு பேரில் ஒருவர் ஸ்தலத்திலே இறந்ததாகவும் ஏனைய இருவரையும் அடம்பன் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மன்னார் பொது வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக ஆனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக அடம்பன் பொலிவார் தீவிர விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)