
posted 1st March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் மாவட்டத்தில் முன்னோர் மேற்கொண்ட பாரம்பரிய நெல் இனங்கள் அழியாது தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மன்னார் 'மெசிடோ' நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அறுவடை இடம்பெற்றது.
அழிந்து வரும் பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் கடந்த வருட இறுதியில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகை பாரம்பரிய நெல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நெற் செய்கையின் அறுவடை புதன்கிழமை (01.03.2023) காத்தான் குளம் பகுதியில் மெசிடோ நிறுவன ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
'நஞ்சற்ற உணவு உற்பத்தியை' ஊக்குவிக்கும் முகமாக முற்றிலும் இயற்கை பசளைகள் பயன்படுத்தி இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட 'சுவடை' என அழைக்கப்படும் பாரம்பரிய மூன்று மாத கால நெல் காத்தான்குளம் விவசாயிகளால் விதைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் மேற்படி அறுவடை பாரம்பரிய முறையில் இடம் பெற்றது.
சேதன பசளையின் மூலம் நெற் செய்கை மேற்கொண்டது போன்று எந்த ஒரு இயந்திர சாதனங்களையும் பயன்படுத்தாது பாரம்பரிய முறையில் விதைப்பு மேற்கொண்டு அருவி வெட்டி சூடு மிதித்து அனைத்தும் இயற்கையான பாரம்பரிய முறைப்படி இடம் பெற்றது.
மெசிடோ நிறுவனமானது கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாகவும் நஞ்சற்ற விவசாய செய்கையையை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சீணட்டி, மொட்டைகறுப்பன், சுவடை, பச்சைபபெரருமாழ் போன்ற நெல் இனங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)