
posted 17th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெறவுள்ளதாகவும், அதில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவுகளை வழங்கி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)