
posted 4th March 2023
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக நேற்று (03) வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பஸ் நிலையம் முன்பாக முற்பகல் 10. 30 மணியளவில் அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சித் தேர்தலை உடன் நிறுத்து, வடபகுதி கடல் வளத்தை இந்தியாவுக்கு விற்காதே, உழைக்கும் மக்களை சுரண்டாதே என பல்வேறு கோசங்களை போராட்டத்தின்போது எழுப்பினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)