பொறி இருக்கிறது,பொறிமுறை இல்லை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிங்கள ஆட்சியாளர்களிடம் பொறி இருக்கிறது,பொறிமுறை இல்லை இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இனவாத, மதவாத பொறிகள் உள்ளன. இன நல்லிணக்கம், இனப்பிரச்சினை தீர்வுக்கான உள்நாட்டுப் பொறிமுறை இல்லை. இதுதான் சிங்கள அதிகார வர்க்கத்தினரின் 75 ஆண்டுகள் கால கறைபடிந்த வரலாறாகவுள்ளது. அப்படியாக வரலாறு உள்ளபோது இல்லாத உள்நாட்டுப் பொறிமுறையை தமிழ் மக்கள் நம்ப முடியாது. அண்மையில் இலங்கை மனித உரிமை ஆணையம் ஜனாதிபதியிடம் அறிக்கை அளித்துள்ளதாக அறிய முடிகின்றது. அதாவது நல்லிணக்கத்துக்கான உள்நாட்டுப் பொறிமுறையை வடக்கு மக்கள் நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களின் அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி நன்கறிவார்கள். சிங்கள ஆட்சியாளர்களிடம், இனவாத மதவாத வக்கிரமான பொறிகள் உள்ளன என்பதை தமிழர்கள் பட்டறிவு மூலமாக மேலும் நன்கறிவார்கள். அப்படியாக உள்ள வடமாகாணத் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களின் உள்ளகப் பொறிமுறையை நம்பவே வாய்ப்பில்லை. எனவே மனிதவுரிமை ஆணைக்குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையை தமிழர்கள் நம்ப மாட்டார்கள்.

சிங்கள ஆட்சியர்களிடம் இனவாதம், மதவாதம், பேச்சுவார்த்தை, சமாதான ஒப்பந்தம், உடன்பாடு போன்ற பொறிகள் உள்ளன. அவற்றின் மூலமாக தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்கள்; பலவீனமாக்கப்பட்டார்கள்; வீழ்த்தப்பட்டார்கள் என்பதுதான் வரலாறுகளாகும். பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், திம்புப்பேச்சு வார்த்தை, சர்வகட்சி மாநாடு, நோர்வே அனுசரணையில் அமைந்த சமாதான ஒப்பந்தம் என்பன பொறிகளாக அமைந்து தமிழர்களை வீழ்த்தின. ஏமாற்றங்களைக் கொடுத்தன.

மொத்தத்தில் இந்நாட்டில் அடிப்படைவாதப் பொறிகள் இருக்கின்றனவே தவிர இன நல்லிணக்கத்துக்கான தீர்வுக்குரிய உள்நாட்டுப் பொறிமுறைகள் எவையும் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும். இவையெல்லாம் 75 ஆண்டுகளில் சிங்களத் தலைமைகள் கற்றுத் தந்த கசப்பான வரலாற்றுப் படிப்பினைகளாகும். இதனால்தான் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களின் உள்நாட்டுப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றனர். இது தமிழர்களின் தவறல்ல. சிங்கள ஆட்சியாாளர்களின் வரலாற்றுத் தொடர் தப்புகளாகும். ஏமாற்றுவது சிங்கள இராஜதந்திரம் என்றால் ஏமாறுவது தமிழர்களின் வரலாறாக அமையக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

பொறி இருக்கிறது,பொறிமுறை இல்லை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)