
posted 20th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது
கொழும்பில் இருந்து 3 இலட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த ரயிலில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சியால் பெரும் சேதத்தில் இருந்து காக்கப்பட்டது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு 8 கொள்கலன்களுடன் புறப்பட்ட ரயில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடத்தில் 188ஆவது மைல் கல் அருகில் புகையிரத இயந்திர பகுதியில் தீப்பற்றியது. புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் இதனை அவதானித்து ரயிலை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து மட்டக்களப்பு புகையிரத நிலைத்தில் இருந்து மற்றுமொரு ரயில் இயந்திரம் கொண்டுவரப்பட்டு எரிபொருளும் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)