
posted 26th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பெண் உயிரிழந்தார்
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
பேருந்தின் சாரதியை தாம் கைது செய்துள்ளனர் என்றும் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தனியார் சொகுசு பேருந்து சம்பவ தினமான நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து பயணித்த போது கொழும்பு வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதை அடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)