
posted 26th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புத்தாக்க நிகழ்வுகள்
பெண்களை வலுப்படுத்துவதற்காக வர்த்தகக் கண்காட்சி மற்றும் புத்தாக்க நிகழ்வுகள் திருகோணமலை மாவட்ட செயலாளர் வி.எச்.என். ஜயவிக்ரம தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம், திருகோணமலை மாவட்ட செயலகம், ஜி.ரி. இசட் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த “அவள் தேசத்தின் பெருமைக்குறியவள்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தினம் - 2023 மாவட்ட நிகழ்வுக்கு இணைவாக நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
அங்கு அமைக்கப்பட்ட 68 விற்பனைக் கூடாரங்களில் விஷேட வேலைத் திட்டங்களாக டிஜிற்றல் வலயம், ஐ.சி.ரி தொழில் வங்கி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள், ஐ.சி.ரி பாடநெறிகள் மற்றும் டிஜிற்றல் வங்கிச் சேவைகள், இலத்திரனியல் விளையாட்டுக்கள், கண்காட்சிக் கூடாரங்கள், சுயதொழில் உற்பத்திப் பொருட்கள் போன்றன அமையப் பெற்றதுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வளர்ந்தோர்களுக்கான விசேட வேலைத் திட்டங்கள், ஐ.சி.ரி துறையில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாக பெற்றோரை தெளிவூட்டல், ஐ.சி.ரி துறையின் புதிய பரிணாமம் மற்றும் அதற்குரிய பாட நெறிகள், பிள்ளைகளின் நிகழ்நிலை, சமூக ஊடகங்கள் வாயிலாக இடைஞ்சல்களுக்கு உட்பட்டவர்களுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பான முறையில் இணையத்தளத்தை கையாளுதல் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பில் அறிவூட்டல் போன்ற கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் மத்திய மாகாணத்தை சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களும் பங்கு கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)