
posted 8th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இன்று (08) புதன் முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாணின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)