
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிரியாவிடை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் ஓய்வுபெற்றுள்ள நிலையில் அந்தப் பல்கலைகழகத்தின் சுதந்திர ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வு தொழிலாளர் மேம்பாட்டு நிலையக் கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் முனாஸ் முகைடீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதேவேளை கௌரவ அதிதியாக துணைப் பதிவாளர் ஐ.எல். தஸ்லிம், விஷேட அதிதியாக பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் முனாஸ் முகைடீன் உள்ளிட்ட உயர் சபை உறுப்பினர்களால் மாலையிட்டு வரவேற்கப்பட்ட பதிவாளர் சத்தார், இப் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய உயர் பணிகள் தொடர்பில் சிலாகித்துப் பேசிய நிகழ்வின் தலைவர் மற்றும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் அவர் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)