பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பலவகைச் செய்தித் துணுக்குகள்

மாடுகள் திருடர் கைது

அச்சுவேலியிலிருந்து கடத்திவரப்பட்ட 3 மாடுகள் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், பலாலியில் 3 மாடுகளை களவாடி சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அச்சுவேலியிலிருந்து எந்த அனுமதியும் பெறாமல் கடத்திவரப்பட்ட 3 மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன், இருவரை கைது செய்துள்ளனர்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி கிழக்கை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.



இடைநிறுத்தப்பட்ட நாகர்கோவில் மேலதிக சுடலை கட்டுமானம்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு பகுதியில் இருக்கின்ற சுடலைக்கு மேலதிமாக சுடலை ஒன்றினை அமைப்பதற்க்கு எடுக்கப்பட்ட முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

நேற்றைய (14) தினம் பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் தலமையிலான குழுவினர் நாகர் கோவில் கிழக்கு மக்களுடன் கலந்துரையாடி தற்காலிகமாக சுடலை அமைப்பதை நிறுத்தி வைப்பதாகவும், பிரதேச செயலர், பிரதேச செயலகம், நாகர்கோவில் கிழக்கு, மேற்கு மக்கள் எல்லோரும் ஒன்று கூடி இதற்கு ஒரு நிரந்தர முடிவு எடுப்பதாகவும் உடன்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த பிரச்சினை தற்காலிக முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றைய (14) தினம் பொலீசார் மேற்கொண்ட தாக்குதல் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் உரியவர்கள் பருத்தித்திறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். இதனால் இன்று இடம் பெறவிருந்த ஆர்ப்பாட்டம் சுடலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்பனவும் இடை நிறுத்தப்பட்டன.

குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக பருத்தித்துறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் இலங்ககோன் தலைமையில் பருத்தித்துறை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, கிராம சேவகர் ஆகிய குழுவினர் ஈடுபட்டனர்.

இதே வேளை நேற்று (14) நாகர்கோவில் முருகன் ஆலய சப்பற கொட்டகை ஒரு தீயில் எரிந்தமையும் குறிப்பிட தக்கது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

படகு உரிமையாளர்களுக்கு எட்டுமா தீர்வு?

பலநாள் படகு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (13.03.2023) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பலநாள் படகு உரிமையாளர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சரிடம் எடுத்துரைத்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் வீழ்ச்சி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் தமது தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு டீசல் விலையில் மானியங்களைப் பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தற்போதைய நிலையில் மீனின் விலை குறைந்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீன் ஏற்றுமதியின்போது அவற்றின் தரம் குறித்து பரீட்சிக்கப்பட்டு தரம் உறுதிப்படுத்தப்படும்போது மீன் ஏற்றுமதியாளர்களிடையே நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பலநாள் படகு உரிமையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

நேற்று முன்தினம் (13) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பலநாள் படகு உரிமையாளர்கள், அமைச்சின் மேலதிகச் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டிருந்தார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

பெயர் பெற்ற மாதகல் மீன்

முரல் மீனுக்கு பெயர் பெற்றது யாழ்ப்பாணம் மாதகல் கிராமமாகும். இப் பகுதியில் விசேட அம்சமாக உள்ள முரல் மீன்படுகை அதிகரித்த காலமாக இம்மாதம் உள்ள நிலையில் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் மாதகல் மேற்கு கடற்கரை இரவு நேரங்களில் விழாக்கோலம் பூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதகல் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்ற முரல் மீன் தனித்துவமானதும், சுவை வாய்ந்ததுமாக இருப்பதாகவும், அதிகளவானவோர் குறித்த கடற்பரப்பிற்கு தமது குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் சென்று படகுகளில் பிடித்து வரப்படும் மீனை கரையில் உடனடியாகவே கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனால், மீனவர்கள் மீண்டும் உடனடியாக முரல் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக ஒரு மீன் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் இக்காலப்பகுதியினை மாதகல் பகுதியை சுற்றுலாவுக்கு உகந்த காலமாக அடையாளப்படுத்தியுள்ளது.

இது தவிர, குறித்த பகுதியில் சுண்டல் உட்பட்ட பல உணவு வகைகளும் பிரதேசவாசிகளால் விற்பனை செய்யப்படுகின்றன.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)